யாழ்ப்பாணக்குடா நாட்டிலே நடுநாயகமாக அமைந்திருக்கும் புத்தூர் பதியினிலே மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியனவற்றை தன்னகத்தே கொண்டு வேண்டுவாருக்கு வேண்டுவனவெல்லாம் அள்ளி வழங்கிக் கொண்டிக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சுவாமி சமேத ஸ்ரீ விசுவநாத சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது.இது புத்தூர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

பல்லவரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இந்துசமய மறுமலர்ச்சியை தொடர்ந்து சமண சமயம் போன்றன வீழ்ச்சியுற்றதாகவும் நாயன்மார்களின் தேவார திருவாசகங்கள் மற்றும் ஆழ்வார்களின் திவ்விய பிரபந்தங்கள் தோற்றம் பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.இந்தக் காலத்தில் புதிய ஆலயங்கள் தோற்றம் பெற்றதாகவும் பழைய ஆலயங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.தக்ஷ்ண கைலாய புராணத்திலே கூறப்படுகின்ற கோவில் இந்தக் கோவிலையும் அதில் குறிப்பிடப்படுகின்ற நீரூற்று நிலாவரை வாவியினையும் குறிக்கின்றது.இந்தக் கோவிலுக்கும் வாவிக்கும் இடையே தூரம் ஏறக்குறைய 1/2 மைல் ஆகும்.வரலாற்று காலம் தொடக்கம் இந்த வாவியில்தான் தீர்த்தோற்சவம் இடம்பெற்றாலும் காலவோட்டத்தில் இது மருவி ஆலயத்தோடு அமைந்துள்ள திருக்குளத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெற்று வருகின்றது.

+++++++++++++++++

புத்தூர் சிவன்கோவில் ரதோற்சவம், தீர்த்தம்
.

புத்தூர் சிவன் கோவில் பூங்காவனத்திருவிழா 02.08.2022